கார் – மோட்டார் சைக்கிளை மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஏ- 9 வீதியின் முல்லைத்தீவு – திருமுறிகண்டி பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
மருத்துவர் ஒருவர் செலுத்திய கார் மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில், பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். மோதிய காரை செலுத்திய மருத்துவரே காயமடைந்த இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்திருந்தார். எனினும், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரை செலுத்திய மருத்துவர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
