வெடுக்குநாறி மலையில் தடையின்றி நடந்த சிவாரத்திரி வழிபாடுகள்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது மதியம் 2மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுட்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று காலை முதல் பொலிசார் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவித தடைகளும் விதித்திருக்கவில்லை.

இம்முறை இரவுநேர பூஜகளை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles