காணித் தகராறில் கோப்பாயில் ஒருவர் அடித்துக் கொலை! சந்தேகநபர்கள் மூவர் தலைமறைவு

கோப்பாய் பகுதியில் காணித் தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்,

கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சினை முற்றி , கைகலப்பாக மாறியுள்ளது. அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்றுச கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்கு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles