நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் நைஜர் மாகாணம், பொர்கு நகரில் மூன்று கிராமங்களுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கிராமங்களுக்குள் நேற்று ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேலும் 20இற்கும் அதிகமானோரை துப்பாக்கி முனையில் கடத்தியும் சென்றுள்ளது.

குறித்த இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர் கடத்திச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரியாவில் அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற அமைப்புக்களும் ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles