பாகிஸ்தானின் தாக்குதலில் ஆப்கான் எல்லையில் 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய காலமாகவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் இராணுவத்தினர் பெஹ்ஷூத் மாவட்டத்தில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

அவர்களில் இதுவரை நான்கு பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. என ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் என்றழைக்கப்படும் அமைப்பினர் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உளவுத்துறையின் அடிப்படையில் தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles