வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா பறங்கியாற்று பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் மற்றும் அயலவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் ஆற்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பறங்கியாற்று பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வனவிலங்குக்காக வைக்கப்பட்ட சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles