சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறிவிழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – ஊரெழு பகுதியை சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன்(வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் நேற்றிரவு மாடியிலிருந்து இறங்கியுள்ளார். இதன்போது கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles