சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் யாழ்ப்பாணத்துக்கு ஆன்மீக விஜயம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரியும் ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரிஜீ மகாராஜ்  (Kaishanand Giriji Maharaj) உள்ளிட்ட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சுவாமி உட்பட குழுவினரை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் மற்றும் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் திரு. ஜெ. விவேகானந்தன் உள்ளிட்ட குழுவினர் சுவாமிகள் தலைமையிலான குழுவினரை வரவேற்றனர்.

சுவாமி உள்ளிட்டம் குழுவினர் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து தரிசனத்தில் ஈடுபட்டனர்.

ஆன்மீகத் தொடர்புடைய சிவாலயங்கள் மற்றும் நுவரெலியா சீதை அம்மன் கோவிலுக்கு ஆன்மீக விஜயம் மேற்கொள்வதன் மூலம் இலங்கை மற்றும் இந்திய இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார விஜயங்களை ஊக்குவிக்கும் முகமாக சுவாமி அவர்களின் விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles