#image_title

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது, மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னாருக்கு தெற்கு திசையில் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் அவர்களது படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here