ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘ரஜினி 173’ படப்பிடிப்பு

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘ரஜினி173’. இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது.

இதனிடையே, ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டார் சிபி சக்கரவர்த்தி. அப்போது பேசுகையில், ‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இப்படத்தினை ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

‘ரஜினி173’ படத்தினை முடித்துவிட்டு தான், கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை நெல்சன் இயக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

ரஜினி நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘ஜெயிலர் 2’ இருக்கிறது. எப்போது வெளியீடு என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles