பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக யாழில் மக்களின் கருத்து திரட்டல்

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி, அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்துக்கள் திரட்டப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதில் பெருமளவான பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தபால் அட்டைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்து வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles