ரஷ்மிகாவை கரம்பிடித்தார் விஜய் தேவரகொண்டா

பிரபல நடிகர்களும் நீண்ட நாள் காதலர்களுமான விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்த நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானின் உதய்ப்பூரிலுள்ள நட்சத்திர மாளிகையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.

ஏற்கனவே, இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு பத்திரிக்கை வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், இன்று அவர்கள் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக, விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிகழ்வை ஆவணப்படமாக்குவதற்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles