தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் சனத் ஜயசூரிய

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும்.

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை.

பதவி விலகல் தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

தனது தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தக் காலம் மேலும் எஞ்சியிருந்த போதிலும், அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

2024 ஜூலை மாதம் இந்தியாவிற்கு எதிரான தொடரின் போது இடைக்காலப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles