அமரர் கந்தையா நாகலிங்கம்

மலர்வு02 SEP 1929 – உதிர்வு20 FEB 2016
வயது 86
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்)

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம் முருக்கடியில் பிறந்தவரும், 1ம் வட்டாரம் கல்லிக்காடு, சந்தையடியில் வாழ்ந்தவரும், யாழ்ப்பாண பிறவுண் வீதியை வதிவிடமாக கொண்டிருந்த வருமான அமரர் கந்தையா நாகலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்ப குலத்தின் வேர் நீயே!
வழிகாட்டிடும் துருவ நட்சத்திரமாய்,
எம் வாழ்வை ஒளிர்வித்தாய்!
காலங்கள் ஓடினாலும் உம் கம்பீர குரலும்,
கனிவான பார்வையும் எம் நினைவை விட்டு நீங்காது,
என்றும் எம்மை காத்திடுவாய் ஐயா.

அனைவரிடத்திலும் அன்போடும்,
பண்போடும் பாசத்தோடும், கடமை, கண்ணியம்,
கட்டுப்பாட்டுடன் நல்வழிகாட்டி
எங்களை வளர்த்தெடுத்த எமதருமை ஐயாவே..!

வானத்தை விட்டு நிலவையும் வாசத்தை விட்டு
மலரையும் பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது.

  உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எம்மை விட்டுச் சென்றாலும்,
ஆறாத துயரங்கள் மாறாது பல நூறு
ஆண்டுகள் சென்றாலும் ஆறாது
ஆறாது ஐயா உம் நினைவுகள்..!

அன்னாரின் 10 ம் ஆண்டு துவசம் (நினைவுதினம்) வருகிற ஞாயிற்றுக்கிழமை பங்குனி மாதம் 1ம் திகதி 2026 ஆண்டு அன்று,
அவரது இல்லத்தில் புங்குடுதீவு 1ம் வட்டார சந்தையடியில் நடைபெறும் என்பதை அறிய தருகின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,பூட்டபிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்,ஊரார்,நண்பர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles