அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஜோர்தான், குவைத், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் ஈரான் தலைமை மதகுரு கொமெய்னி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஜோர்தான், குவைத், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஈரானின் 61 ஏவுகணைகள் மற்றும் 34 ட்ரோன்களை வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் முன்னெச்சரிக்கையுடன் உள்ளதாகவும் கூறியுள்ளது.
ஈரானின் தாக்குதலால் டுபாய், கட்டார், அபுதாபி, குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

