ஈரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்தார் என ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்திருந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
79 வயதான Mansoureh Khojasteh Bagherzadeh, அதி உயர் தலைவரை கொல்வதற்கு நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து சுயநினைவிழந்திருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய குறித்த தாக்குதலில் ஈரானின் அதிஉயர் தலைவர், அவரது மகள், மருமகன், பேரப்பிள்ளை மற்றும் தற்போது மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர இராணுவத்தின் சிரேஷ்ட நிலை தலைவர்கள் உட்பட 40இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

