காங்கேசன்துறை ஊறணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போன இரு மீனவர்களும் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்றுள்ளது.
இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கைக் கடல் எல்லையில் விட்டுச் சென்றனர்.
பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் சென்ற நிலையில் இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கப்பட்டுள்ளது.

