



வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 119ஆவது போட்டியாகும்.
இரு கல்லூரிகளின் அதிபர்கள் தலைமையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வீரர்கள் அறிமுகம் மற்றும் நாணயச்சுழற்சி இடம்பெற்றன.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதையடுத்து சென்.ஜோன்ஸ் கல்லூரி துடுப்பெடுத்தாடி வருகிறது.

