பருவ கால மழை மற்றும் கப்பல் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் இந்தியா நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை, இன்று மீண்டும் ஆரம்பமானது.
தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு, 77 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், பிற்பகல் 2.00 மணியளவில், காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
அதன் பின்னர், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 92 பயணிகளுடன், 3.00 மணிக்கு, நாகப்பட்டினம் நோக்கிய பயணத்தை மேற்கொண்டது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி, பருவகால மழை மற்றும் கப்பல் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய 6 நாட்களும் சேவை இடம்பெறுவதுடன், இருவழிக் கட்டணமாக, இலங்கை ரூபாவில் 28 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படுகின்றது.

