வயது 53
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பாவற்குளம், Sri Lanka Toronto, Canada
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் யூனிட் 9, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை கணேசலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-02-2026
ஆண்டு நான்கு ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்…
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
நீங்கள் மறைந்து போன பின்பும்
உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!
இன்றுடன் 4 ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்

