வயது 74
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka London, United Kingdom
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து கணேசமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும் எங்களை
என்றும் அரவணைத்து வாழ்ந்த அப்பா
ஐந்தாண்டு காலம் எம்மை விட்டு சென்றதனை
எண்ணுவதற்க்கு மனம் ஒப்பவில்லை
வாழ்ந்த வாழ்வின் பெருமைகளும்
நீங்கள் ஆற்றிய கடமைகளும்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் இதயத்தை விட்டு அகலாது
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாம் கண்டோம்
கனவெல்லாம் நனவாகுமுன் கண்மூடி மறைந்தீர்கள்
மனம் ஏங்கித் தவிக்கின்றது உங்கள் முகம் காண
வாராயோ இனியும் மறு பிறப்பாக எங்களிடம்
வானுலகம் எய்தினாலும் எங்களுக்கு வழிகாட்டியாக
என்றேன்றும் இருப்பீர்கள் உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
