வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 பவுண் நகை கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்த 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் நகையை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுத்தனர். பின்னர் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளனர். இதில் படுக்காயமடைந்த கணவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றபோது மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரிய போதிலும் பொலிஸார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 3 கொள்ளையர்கள் ஈடுபட்டமை சிசிடிவி காணொலியில் பதிவாகியுள்ளது

