நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே தகராறு – ஒருவர் குத்திக் கொலை!

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு கத்திக்குத்தில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.

கண்டியை சேர்ந்த எம்.கிருஷ்ணகுமார் (வயது 43)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நயினாதீவில் உள்ள ஆலயங்களில் கண்டி மற்றும் நுவரெலியா பகுதியை சேர்ந்த இரண்டு பூசகர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் நுவரெலியாவை சேர்ந்த பூசகரின் கத்தி குத்துக்கு இலக்காகி கண்டியை சேர்ந்த பூசகர் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles