மத்தியகிழக்கு நாடுகளின் அமைதிக்காக பிரார்த்திக்கிறேன் – பாப்பரசர் லியோ

மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் போரால் உயிரிழந்தவர்களுக்காக திருத்தந்தை 14ஆம் லியோ பிரார்த்தித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருத்தந்தை லியோ, மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அவதானித்து வருவதாகவும் குண்டுவீச்சிலும் யுத்தத்திலும் உயிரிழந்தவர்களுக்காக துயரத்தை பகிர்ந்துகொள்வதாக வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் உட்பட பல அப்பாவிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களுக்கு உதவி செய்தவர்களில் முக்கியமாக மரோனைட் அருள்பணியாளார் பியர் எல்-ரஹி உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இக் கொலைச் சம்பவம் லெபனானிலுள்ள க்யூலாயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த போரானது விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என பிரார்த்திப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய ஏவகணைத் தாக்குதலுக்குட்பட்ட வீட்டிலுள்ள குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அங்கு சென்றபோது எல்-ரஹி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles