மருமகனின் வாள் வெட்டில் மாமியார் பலியான சம்பவம் நெல்லியடியில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதவது –
வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு மனைவியின் தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே மாமனாரை படுகாயப்படுத்திவிட்டு மாமியாரை படுகொலை செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து பருத்திதுறை பொலிஸ் பொறுப்பு அதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான 5 இற்று மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைதானார்.
