16 ஈரானிய ஏவுணைக் கப்பல்களை அழித்தாக அமெரிக்கா அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில், ஈரான் தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர்க்கப்பல்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles