பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலேயை சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகிறது.
சுரேஷ் சாலேவை பாதுகாப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட தயாராகவுள்ளோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
