மல்லாவியில் பாம்பு தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு

மல்லாவியில் பாம்பு தீண்டியதில் நேற்று புதன்கிழமை மாலை ஒருவர் உயிரிழந்தார்.

வயலை பார்க்க சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக கடமை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அவரது சடலம் பிரேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles