ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடிவைக்கப்படும் – மொஜ்தபா கமேனி அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடிவைக்கப் போவதாகவும் ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் –

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களையும் உடனடியாக மூடிவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால், அந்தத் தளங்களைக் இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஈரான் அண்டை நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், தாக்குதல்கள் அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமே இலக்காகக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஈரானுக்கு எதிரான தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடிவைக்கப் போவதாகவும் அவர் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles