அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரானுக்கிடையில் போர் நிலவி வருகின்ற நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக மசகு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதனால் பல நாடுகளில் பெற்றோல், டீசல், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குஜராத்துக்கு வந்த சரக்குக் கப்பல் மீது நேற்று புதன்கிழமை ஹோர்மூஸ் ஜலசந்தி அருகில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஷ
இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையையடுத்து, எரிபொருள் ஏற்றி வரும் இந்திய கப்பல்களுக்கு ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக செல்வதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பால் இந்தியாவுக்கு தடையின்றி எரிபொருள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
