அமெரிக்க விமானப்படை KC-135 ஸ்ட்ராடோராங்கர்(Stratotanker) மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது.
“ஒபரேஷன் எபிக் ஃப்யூரியின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று CENTCOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது.
மற்றொரு KC-135 விமானம் இஸ்ரேலின் Ben Gurion விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தின் வால் பகுதியில் பாதியைக் காணவில்லை என புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சேதத்துடன் கடினமான சூழ்நிலையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது “ஒரு நட்புரீதியான துப்பாக்கிச் சூடு சம்பவத்திலோ அல்லது மோதலின்போதான தாக்குதலின் விளைவாக இல்லை. என அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
