மன்னார் மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் குறித்தும், சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின் போது முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
