QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
தமது வீடுகளில் இருந்து தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள், கடமைக்காக வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறு குறித்த அறிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
