யாழில் வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் நேற்று சனிக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டது. போரைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரிமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் ஐஸும், மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம் ஐஸும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles