யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், சுவிஸ், கொழும்பு ஆகிய இடங்களில் வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் இராமநாதி அவர்கள் 12-03-2026 வியாழக்கிழமை அன்று புங்குடுதீவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி, பகீரதி, விஜிதா, திவாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணன், பகீரதன், இலங்கஸ்வரன், தர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரிமளம், குமாரசாமி மற்றும் கனகம்மா(இலங்கை), செல்வராணி(சுவிஸ்), தனலட்சுமி(கனடா), நடேசமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், மகாலட்சுமி, இராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கோபாலபிள்ளை மற்றும் ஜீவா(சுவிஸ்), சந்திரபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற திருவாசகம், ஞானசம்பந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தயா ஆகியோரின் மைத்துனரும்,
கன்னிகா, லோகேஸ்வரி, சுதா, காலஞ்சென்ற தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராகவி, அபிராமி, ஆர்த்திகன், பவித்திரா, பவித்திரன், பைரவி, அபிலாஸ், அபிநயா, ஆர்த்திகா ஆகியோரின் அம்மப்பாவும்,
அமிதா, அபிதா, அபினாஸ், ஆகியோரின் அப்பப்பாவும்,
எழில், மதுசிகா ஆகியோரின் தாத்தாவும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் மற்றும் தேவமனோகரன், யமுனா, சுரேந்திரன், குகன், வசந்தி, வசந்தன், குமார், கவிதா, நிதி, சசிகரன், ராதிகா, ஷர்மிலி, சிந்து, ராதிகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
நித்தியகலாவின் அன்புச் சித்தப்பாவும்; கிசோ, நித்தியா, தினேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-03-2026 திங்கட்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் கிரியை நடைபெற்று புங்குடுதீவில் உள்ள மணற்காட்டு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
