மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அதிவிசேட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் நிர்வாகப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது.
