விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாளை வியாழக்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதனை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனவே குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
