டுபாய்க்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து

டுபாய்க்கான வானூர்தி சேவைகள் இன்றும் (19) நாளையும் (20) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

மேலும் தமாம், டோஹா, குவைத் ஆகிய நாடுகளுக்கான வானூர்தி சேவைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணங்களுக்கான முன்பதிவுகளை செய்தவர்கள் தங்களின் போக்குவரத்து தொடர்பில் 1979 எனும் துரித தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று வானூர்தி சேவைகள் தொடர்பிலான தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles