முதல் நாளில் ரூ.240 கோடி வசூல் – ‘துரந்தர் 2’ சாதனை!

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம், முதல் நாளிலேயே ரூ.240 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ.145 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒரு நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் நேரடி இந்திப் படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இந்த வசூல் சாதனையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கட்டணக் காட்சிகள் மூலம் கிடைத்த ரூ.43 கோடியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ (ரூ.274 கோடி) முதலிடத்தில் உள்ள நிலையில், ‘பாகுபலி 2’ (ரூ. 214 கோடி), ‘ஆர்.ஆர்.ஆர்’ (ரூ. 223 கோடி) மற்றும் ‘கல்கி 2898 ஏ.டி’ ஆகிய படங்களின் முதல் நாள் சாதனைகளை ‘துரந்தர் 2’ பின்னுக்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக இந்தி பதிப்பில் மட்டும் ஒரு நாளில் ரூ.102 கோடி ஈட்டி சாதனை படைத்துள்ளது.

ஸ்பை த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், மாதவன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பண்டிகை விடுமுறை நாட்கள் இப்படத்தின் வசூலுக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன. வெளிநாடுகளிலும் இப்படம் சுமார் 9.5 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி சர்வதேச சந்தையிலும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

இந்த அபாரமான வரவேற்பால், வார இறுதி நாட்களுக்குள் இப்படம் ரூ.500 கோடி வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles