உலகப் புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் ஷக் நொறிஸ் காலமானார்

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் ஷக் நொறிஸ் (Chuck Norris) காலமானார்.

அவர் காலமான போது அவருக்கு 86 வயது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புகழ்பெற்ற தற்காப்புக் கலை நிபுணரான ஷக் நொறிஸ், ஒரு சிறந்த நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கியவர்.

1940 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் பிறந்த இவர், 1958 முதல் 1962 வரை அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியுள்ளார்.

அதன்பின்னர் விமானப்படையிலிருந்து விலகி நடிப்புத்துறையில் தடம் பதித்தார்.

குறிப்பாக, 1972 ஆம் ஆண்டு புரூஸ் லீயுடன் இணைந்து “Way of the Dragon” திரைப்படத்தில் அவர் நடித்த சண்டைக் காட்சி, அவர் உலகம் முழுவதும் பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles