காணாமல்போன விரிவுரையாளரின் மகளும், மருமகனும் பிடிபட்டனர் !

யாழ்ப்பாணம் – அரியாலை, புங்கன்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இருந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருடன் காணாமல்போன அவரது மகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், விரிவுரையாளரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

குறித்த விரிவுரையாளரின் மகளும் அலரது காதலனும் திருகோணமலை – நிலாவெளியில் வைத்துப் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்து காணாமல்போன விரிவுரையாளரின் காரும் மீட்கப்லட்டுள்ளதாகவும் பொலீஸ் வட்டாரத்தில் இருந்து அறியக்கிடைத்தது.

எனினும், கைது செய்யப்பட்டவர்களுடன் காணமல் போன விரிவைரையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்ட பொலீஸார் நேற்றிரவு இந்தச் செய்தி அச்சுக்குப் போகும்வரை விரிவுரையாளருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய முடியாமல் இருப்பதாகத் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தனித்திருந்த பெண் விரிவுரையாளரும், அவரது மகளும் தொடர்புகளேதும் இன்றிக் காணாமல் போயிருந்தனர். அவர்களது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வுப் பொலீஸார் விசாரணகறை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்தின் போது காணாமல் போனதாகக் குறிப்பிடப்பட்ட விரிவுரையாளரின் வங்கி அட்டை கிளிநொச்சியிலுள்ள வங்கி ஒன்றில் பயன்படுத்தப்பட்டதை முதலில் பொலீஸார் கண்டறிந்தனர் எனவும் தொடர் விசாரணையின்போது விரிவுரையாளரின் காருக்குரிய கியூ ஆர் பயன்படுத்தி திருகோணமலைப் பகுதியில் காருக்கு எரிபொருள் நிரப்பியதாகவும் தெரிய வந்தது.

இதனையடுத்து, திருகோணமலைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதை அடுத்து நிலாவெளியில் வைத்து விரிவுரையாளரின் மகளும் அலரது காதலனும் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles