திரு கணபதிப்பிள்ளை சோமசுந்தரம்

பிறப்பு03 DEC 1937 – இறப்பு22 FEB 2026
ஒய்வுநிலை எழுதுவினைஞர், சுங்கத்திணைக்களம், யாழ்ப்பாணம், நீர்பாசனத்துறை- கிளிநொச்சி, வவுனியா
வயது 88
நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) மானிப்பாய், Sri Lanka வளசரவாக்கம், India பளை, Sri Lanka திருநாவற்குளம், Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, மானிப்பாய், இந்தியா சென்னை வளசரவாக்கம், கிளிநொச்சி பளை இந்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் திருவுருவே அகத்தின்
ஒளிவிளக்கே அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
முப்பதொரு நாட்கள் ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம் கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால் துடித்து
பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-
அப்பா மாறாது ஒருபோதும்
உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 09.03.2026 திங்கட்கிழமை இராமேஸ்வரம் புனிதத்தீர்த்தத்தில் நடைபெற்று 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று வீட்டுக்கிருத்திய கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் காலை 09:00 மணிக்கு நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
இல.29,1ம் ஒழுங்கை (லொறிபார்க்),
திருநாவற்குளம்,
வவுனியா. 

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles