இஸ்ரேலின் திமோனாவில் ஈரான் நடத்திய தாக்குதலில் 4 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் திமோனாவில் ஈரான் நடத்திய தாக்குதலை காணொளியாகப் பதிவு செய்தபோதே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
