இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் 100இற்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது.
டைமோனா மற்றும் அராத் பகுதிகளிலுள்ள அணுசக்தி நிலையங்களை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. டைமோனா பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தை நோக்கி ஏவுகணைகள் வந்தன.
அதில் ஒன்று அந்த பகுதியிலுள்ள கட்டடத்தில் விழுந்தது. மற்றொன்று தரையில் விழுந்தது. இந்த ஏவுகணைகளை, இஸ்ரேலில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் தடுக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதில், அராத் பகுதியில் 84 பேரும், டைமோனா பகுதியில் 33 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
