சொகுசு பஸ்ஸில் பயணம் செய்தவர் திடீரென மரணம்!

கொழும்பு – வவுனியா சொகுசு பஸ்ஸில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் நேற்று(22) இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸில் குறித்த நபர் பயணம் செய்துள்ளார்.

இதன்போது பஸ் நேற்று அதிகாலை வவுனியாவை அடைந்த நிலையில் அவரது நிலை தொடர்பாக சந்தேகம் அடைந்த பஸ் நடத்துநர் மற்றும் சாரதி ஆகியோர் பஸ்ஸை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய அலாவுதீன் என்ற நபரே மரணமடைந்துள்ளார்.

அவர் புத்தளம் பகுதியில் இருந்து குறித்த பஸ்ஸில் ஏறியதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles