சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்

நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் இன்று(24) காலை 08 மணியளவில் தனது 75வது வயதில் நிந்தவூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர்.

இவர் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்புத் துணைவியாரும், அகீலா, அகீல் ஆகியோரின் பாசமுள்ள தந்தையுமானவர்.

தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, உதயன், தினக்குரல், தினகரன் உள்ளிட்ட பல பத்திரிகைளினது பிராந்திய செய்தியாளராகவும் கடமையாற்றிய இவர், ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையாளருமாவார்.

சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக ஊடகப் பணி செய்தவர். ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பையும், மரியாதையும் பெற்றிருந்தார்.

பல ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும், செய்திகளை எழுதுவதில் புதிய வடிவங்களையும், சொற்பிரயோகங்களையும் கையாண்டவராவார்.

அதுமட்டுமன்றி சகல அரசியல்வாதிகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிய ஒருவராகவும் காணப்பட்டார்.

அதே வேளை, எல்லோருடனும் மிகவும் அன்பாகவும், சிரிந்த மனதுடனும், நகைச் சுவையாகவும் பழகக் கூடியவராகவும் தமது வாழ்வை முன்னெடுத்தவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லக்கம் இன்று (24) மாலை நிந்தவூர் ரவாஹா பொது மையானத்தில் இடம்பெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles