சுரேஷ் சாலேக்கு திடீர் சுகவீனம்!

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கியமான விசாரணைகள் நிமித்தம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவுகாரணமாக தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles