குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த டிரோன் தாக்குதல்களில், அங்கிருந்த ராடர் அமைப்புகள் கடுமையான சேதமடைந்துள்ளதாக குவைத் செய்திகள் தெரிவித்துள்ளது.
முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்த போதிலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதை சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
