சவுதி அரேபியாவில் அமைந்துள்ள முக்கிய இராணுவத் தளமான பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அங்கு நிலைகொண்டிருந்த 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
விமானத் தளத்திலிருந்த சில கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ள போதிலும், முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தத் தாக்குதலானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு அமெரிக்கா தரப்பிலிருந்து எவ்வாறான பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.
