பிரான்ஸின் பிரதி மேயரானார் இலங்கை தமிழ்ப் பெண்

பிரான்சின் பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள பொன்டோ-கொம்போல்ட் நகராட்சியின் பிரதி மேயராக இலங்கைத் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட 25 வயதான அதிதியா ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை தமிழ் தம்பதியினரின் மகளான இவர், தனது 19 வயதிலேயே நகர சபை உறுப்பினராக மக்கள் சேவையில் கால்பதித்தார்.

யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், பிரான்சில் பிறந்து வளர்ந்தவர்.

2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை இளைஞர் விவகாரங்களுக்கான நகர சபை உறுப்பினராகக் கடமையாற்றினார்.

தனது பதவிக்காலத்தில் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக போன்ற பல முன்னோடித் திட்டங்களையும், சுற்றுச்சூழல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் குறித்த விழிப்புணர்வுப் பட்டறைகளையும் முன்னெடுத்துள்ளார்.

மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வமாக மார்ச் 23 ஆம் திகதி பிரதி மேயராகப் பதவியேற்றுக் கொண்டார்.

எதிர்வரும் காலங்களில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் இவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles